பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி விடப்பட்டு கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சதீஷ் என்ற நபரை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சத்தியப்பிரியா என்ற கல்லூரி மாணவியை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற நபர் காதலிக்க வற்புறுத்தி, நேற்று மதியம் 1 மணியளவில் பரங்கி மலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்தார்.
இந்த கொலை தொடர்பாக, பரங்கிமலை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளியை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பரங்கிமலை ரயில் நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சதீஷ் ஆட்டோவில் தப்பி சென்றது தெரியவந்தது.
கொலை செய்து விட்டு தனது செல்போனை சதீஷ் சுவிட்ச் ஆஃப் செய்ததால், கடைசியாக அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட சிக்னலை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
பின்னர் கண்ணகி நகர் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சதீஷ் சுற்றி திரிந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நள்ளிரவு போலீசார் சதீஷை கைது செய்தனர். தற்போது தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சதீஷீடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
இந்து மத சர்ச்சையும் பொன்னியின் செல்வன் வசூலும் : சின்ன பழுவேட்டைரையர் ட்வீட்!