மாமல்லபுரத்தில் சைக்கிள் பேரணி!

தமிழகம்

எச்சிஎல் மென்பொருள் நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் – கானத்தூர் இடையே நடைபெறும் சைக்கிள் பேரணியை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

இந்த சைக்கிள் பேரணியாது அதிகாலை 4.30 மணிக்கு துவங்கியது. 1000-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் 8-ஆம் தேதி ஒத்திகை பேரணி நடைபெற்றது.

இந்தநிலையில் சைக்கிள் பேரணி காரணமாக அதிகாலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை திருவான்மியூரிலிருந்து நீலாங்கரை வழியாக மாமல்லபுரம் செல்லக்கூடிய வாகனங்கள் அக்கரையிலிருந்து வலது புறம் திரும்பி ஓஎம்ஆர் சாலைக்கு சென்று சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் வழியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செல்வம்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

சண்டே ஸ்பெஷல்: கிரீன் டீ பிரியரா நீங்கள்? அளவுக்கு அதிகமாகக் குடிப்பது ஆபத்து!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0