பெங்காலி ஸ்வீட் வகைகளில் பிரபலமான ரசகுல்லா, சந்தேஷ் மற்றும் ரசமலாய் போன்று இந்த மலாய் சம்சமும் பிரபலமானது. கண்ணைக் கவரும் பார்த்தவுடன் சுவைக்க நினைக்கும் இந்த இனிப்பு வகையை நீங்களும் வீட்டில் செய்து அசத்தலாம். அடுத்த வாரம் வரும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடலாம்.
என்ன தேவை?
காய்ச்சாத பால் – அரை லிட்டர்
எலுமிச்சைச்சாறு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – ஒன்றே முக்கால் கப்
சர்க்கரை – ஒரு கப்
ரோஸ் வாட்டர் – சிறிதளவு
ஸ்டஃபிங் செய்ய…
இனிப்பில்லாத கோவா – 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை (சிறிதளவு பாலில் ஊறவைக்கவும்).
அலங்கரிக்க…
பாதாம், பிஸ்தா – தலா 10 (பொடியாக நறுக்கவும்)
எப்படிச் செய்வது?
அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் இறக்கவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, பால் திரியும் வரை தொடர்ந்து கிளறவும். இதை மெல்லிய துணியில் ஊற்றி, எலுமிச்சை வாசனை போகும் வரை நன்கு கழுவவும். பிறகு, மூட்டை கட்டித் தண்ணீர் முழுவதும் வடியும் வரை தொங்கவிடவும். இதுவே பனீர். இதை அகலமான தட்டில் போட்டு மிருதுவாகும் வரை பிசையவும். பிசைந்த பனீரை ஓவல் வடிவத்தில் உருட்டவும். மற்றோர் அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, ரோஸ் வாட்டர், தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் உருண்டைகளைப் போட்டு மூடி 15 நிமிடங்கள் வேகவைக்கவும். நடுநடுவே மெதுவாக உருண்டைகள் உடைத்துவிடாமல் கிளறி இறக்கவும். இதுவே சம்சம்.
ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து நன்கு பிசையவும். சம்சம் ஆறியதும் குறுக்கே இரண்டாக வெட்டி சிறிதளவு ஸ்டப்பிங்கை வைக்கவும். மேலே பாதாம், பிஸ்தா தூவி மடித்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : காஜு பிஸ்தா ரோல்ஸ்
கிச்சன் கீர்த்தனா : கம்பு அவல் மிக்சர்
15 நிமிடத்தில் 4.5 செமீ… மதுரையைப் புரட்டி போட்ட கனமழை!
25 கோடி பஞ்சாயத்து… ஐபிஎஸ் Vs ஐஏஎஸ்