கிச்சன் கீர்த்தனா: மலபார் கோழி வறுவல்!

தமிழகம்

அரபிக்கடல் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளால் பாதுகாக்கப்பட்ட மலபார் பகுதி ஒரு வளமான சமையல் சுவையையும் கொண்டது. உள்ளூர் பாரம்பர்யங்களுடன் கலந்து மலபார் உணவுக்கு அதன் தனித்துவமான பண்புகளை வழங்கும் இந்த மலபார் கோழி வறுவல் அவற்றில் முக்கியமானது. இந்த வீக் எண்டைக் கொண்டாட இந்த மலபார் ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

கோழிக் கறி- 150 கிராம்
வெங்காயம் – 2
தேங்காய் எண்ணெய்- 150 மில்லி
தேங்காய்த் துருவல்- 80 கிராம்
கறிவேப்பிலை – 10 கிராம்
தக்காளி- 3 (நறுக்கவும்)
சோம்பு – 5 கிராம்
பட்டை இலை – 10 கிராம்
ஏலக்காய் – 5 கிராம்
அன்னாசிப்பூ- 5 கிராம்
மிளகுத்தூள் – 10 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது- 40 கிராம்
இடித்த இஞ்சி – 1

எப்படிச் செய்வது?

எண்ணெயைச் சூடாக்கி அன்னாசிப்பூ, பட்டை இலை, இஞ்சி, கறிவேப்பிலை, ஏலக்காய், மிளகுத்தூள் போன்றவற்றைச் சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும். துருவியத் தேங்காய் சேர்த்து மீண்டும் வறுத்து ஆற வைத்து, அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தேங்காய் எண்ணெயில் கோழிக்கறி, சோம்பு, வெங்காயத்தை வதக்கி, அரைத்து வைத்திருக்கும் மசாலாவுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கிளறி நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு, 15 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்!

புரொக்கோலி ஃபிரிட்டர்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *