குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 6 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில், அதன் முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியானது. தேர்வு எழுதியவர்களில் 29,809 பேர் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
குரூப் 2 பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தகுதி பெற்றனர். குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்காக 21,822 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.
இதற்கான தேர்வுகள் பிப்ரவரி 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் நேற்று (டிசம்பர் 20) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு இரண்டாம் தாள் (பொது அறிவு மற்றும் மொழித்தாள்) தேர்வு கொள்குறி வகையில் எழுத்துத்தேர்வாக (முன்னதாக கணிணி வழித் தேர்வாக நடத்தப்பட இருந்தது) பிப்ரவரி 8ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
அதேபோல குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது.
தொடர்ந்து குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாள் (பொது அறிவு 2) பிப்ரவரி 23ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’ஜாகீர்… அத பாத்தியா?’ : சிறுமியின் பெளலிங்கை கண்டு வியந்த சச்சின் – வீடியோ உள்ளே!
சென்னை டூ பினாங்கு தீவிற்கு இன்று முதல் நேரடி விமான சேவை!
டாப் 10 நியூஸ் : குவைத் செல்லும் பிரதமர் மோடி முதல் பூமிக்கு அருகில் 2 சிறுகோள்கள் வரை!