மயிலம் தேர் திருவிழா: முருகப்பெருமான் வீதியுலா!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோவிலில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று (ஏப்ரல் 4) தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

மார்ச் 27-ஆம் தேதி மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர விழாவின் 9-வது நாளான இன்று தேர் திருவிழா காலை 6 மணிக்கு துவங்கியது. வள்ளி, தெய்வானையுடன் தேரில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வீதியுலா வருகிறார்.

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நாளை இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள் இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 7-ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.

செல்வம்

கடைசி நேரத்தில் பதற்றம்… முதல் வெற்றியை பதிவு செய்தது சி.எஸ்.கே

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts