சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை ஆணையர் மகேஷ்குமார், பெண் போலீஸ் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நேற்று (பிப்ரவரி 13) சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Mahesh kumar ips wife
இந்தநிலையில், தனது கணவரிடம் அந்த பெண் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் பணம் தரமாட்டேன் என்று கூறியதால் புகாரளித்ததாக மகேஷ்குமாரின் மனைவி அனுராதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசிய மகேஷ்குமாரின் மனைவி அனுராதா, “இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. என்னுடைய திருமண நாளான இன்று என் கணவரை அந்த பெண் பழிவாங்கியது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது கணவரை சஸ்பெண்ட் செய்ததை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரின் சின்சியரான உழைப்புக்கு கிடைத்த பெரிய அவமானம் இது.
பணி செய்யும் இடத்தில் எல்லோரும் அவரை தெய்வம் என்று தான் கூப்பிடுவார்கள். அந்த அளவுக்கு அவர் அனைவருக்கும் நல்லது தான் செய்திருக்கிறார். என் கணவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த பெண் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அவர்கள் இரண்டு பேரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். அது எனக்கும் தெரியும். இதனால் பலமுறை அவர்கள் இரண்டு பேரையும் நான் கண்டித்திருக்கிறேன். இதுபோன்று செய்யாதம்மா என்று அந்த பெண்ணிடம் கெஞ்சியிருக்கிறேன்.
எனது கணவரிடம் அந்த பெண் அடிக்கடி பணம் கேட்பார். இவரும் அந்த பெண்ணுக்கு பணம் கொடுப்பார். மறைமலை நகரில், தற்போது அந்த பெண் ஒரு பெரிய வீடு கட்டிக்கொண்டிருக்கிறார். அதற்காக பணம் கேட்டு மிரட்டி வந்தார். அதனால் 25 லட்சம் ரூபாய் கேட்டார். என் கணவர் பணம் கொடுக்காததால் தான் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று அந்த பெண் தவறான புகாரை கொடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார். Mahesh kumar ips wife