பாலியல் புகார்… மகேஷ் குமார் ஐபிஎஸ் சஸ்பெண்ட்!

Published On:

| By Selvam

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில், சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Mahesh Kumar IPS suspended

மகேஷ் குமார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெண் காவலர் ஒருவர் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார். இதனையடுத்து மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த புகார் குறித்து டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி விசாரணை நடத்த சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்தநிலையில், விசாகா கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பெண் காவலருக்கு ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் காவல் துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share