மகா விஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்!

தமிழகம்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 11) ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னை சைதாப்பேட்டை மாதிரி பள்ளி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அங்கு பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை இழிவுபடுத்தியதாக, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் விஜயராஜ் என்ற மாற்றுத்திறனாளி கொடுத்த புகாரின் அடிப்படையில், மகா விஷ்ணு மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் 7-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த மகாவிஷ்ணுவை, விமான நிலையத்தில் வைத்து அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தினர். பின்னர், மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி மகா விஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், சிறையில் உள்ள மகாவிஷ்ணுவை  7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் நேற்று  (செப்டம்பர் 10) மனுத்தாக்கல் செய்திருப்பதாக மின்னம்பலத்தில் நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

போலீஸ் கஸ்டடி கேட்ட நிலையில், புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு மகா விஷ்ணு இன்று பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்.

அங்கு சைதாப்பேட்டை நான்காவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பிரமணியம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையானது நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பூமி பூஜையில் பங்கேற்க விடாமல் தடுத்த திமுகவினர்.. கே.பி.முனுசாமி சாலை மறியல்!

விஜய்யை மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைத்த திருமாவளவன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *