அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றி சர்ச்சையில் சிக்கி கைதாகியுள்ள மகாவிஷ்ணுவை போலீஸ் கஸ்டடியில் எடுக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை மாதிரி பள்ளி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றினார்.
முன்ஜென்ம பாவம் தான், இந்த ஜென்மத்தில் கண், காது கேளாமல் பிறக்கிறார்கள் என்று மகாவிஷ்ணு கூறியதும், அங்கிருந்த தமிழ் ஆசிரியர் சங்கர் அவரை தட்டிக்கேட்டார்.
அந்த ஆசிரியரிடம் மகாவிஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவை அவரே வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்தே அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் சைதாபேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தினர். மகாவிஷ்ணுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு.
மகா விஷ்ணுவை பள்ளிக்கு அழைத்து வந்தது யார் என்று கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் துறை ரீதியான விசாரணை நடத்திவருகிறார். இன்னொரு பக்கம், சிறையில் உள்ள மகாவிஷ்ணுவை 7 நாளில் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் இன்று (செப்டம்பர் 10) மனு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்து குறைந்தபட்சம் மகாவிஷ்ணுவை ஒருநாளாவது போலீஸ் கஸ்டடியில் அனுப்ப நீதிமன்றம் அனுமதிக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் போலீஸார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
நிலவில் அணு மின் நிலையம் … ரஷ்யாவுடன் சீனா, இந்தியா கைகோர்ப்பு!
விசிக மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு : உதயநிதி ரியாக்ஷன்!
போலிஸ்கார், அவர ஜாக்கிரதையா விசாரிங்க, பாத்ரூம்ல வழுக்கி விழுந்து கை, காலை உடைச்சிக்கப் போறாரு.