மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்ட அவதூறு வீடியோ மகாவிஷ்ணுவின் பரம்பொருள் பவுண்டேசன் யூட்யூப் பக்கத்தில் இருந்து இன்று (செப்டம்பர் 9) நீக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூரைச் சேர்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனரும் சொற்பொழிவாளருமான மகாவிஷ்ணு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் தலைவர் சரவணன் என்பவர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கர்மா, பிறவிவினை குறித்து மாணவிகள் மத்தியில் பேசியதற்கு எதிராக கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரிடம் அடாவடியாக வாக்குவாதம் செய்திருந்த வீடியோவை தனது பரம்பொருள் பவுண்டேசன் யூட்யூப் பக்கத்தில் மகாவிஷ்ணு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கப்பட்டுள்ளது, மேலும் மகாவிஷ்ணு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தாக்கல் செய்ய உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Paralympics 2024: 29 பதக்கங்களுடன் இந்தியா வரலாற்று சாதனை – முழு பட்டியல்!
போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: கலந்துகொள்வது எப்படி?