மகா விஷ்ணு எங்கே? – ஓட்டுநர் கேள்வி!

தமிழகம்

மகா விஷ்ணுவை காவல்துறையினர் எங்கு அழைத்துச் சென்றார்கள் என்றே தெரியவில்லை என அவரது ஓட்டுநர் குகன் இன்று (செப்டம்பர் 7) தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றியபோது, அதை தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பரம்பொருள் அறக்கட்டளையின் மகா விஷ்ணுவின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தநிலையில், அனைத்து உலக மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மகா விஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று மதியம் சென்னை வந்த மகா விஷ்ணுவை, சைதாப்பேட்டை போலீசார் விமான நிலையத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதுகுறித்து மகா விஷ்ணுவின் ஓட்டுநர் குகன் செய்தியாளர்களிடம் பேசும்போது,

“மகா விஷ்ணு செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், காவல்துறையினர் செய்தியாளர்களை சந்திக்க விடவில்லை.

கடந்த நான்கு வருடமாக தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் மீது எந்த ஒரு சிறு புகாரும் வந்தது கிடையாது. திருப்பூரில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சைக்கிள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம். மாற்றுத்திறனாளிகளை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மகா விஷ்ணுவுக்கு கிடையாது.

அவருடைய யூடியூப் சேனல் பார்த்து எனக்கு நிறைய மாற்றங்கள் நடந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல நிறைய பேர் அவரால் பயனடைந்துள்ளனர். எனவே மகா விஷ்ணு சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். திருவள்ளூவர், திருமூலர் பேசிய கருத்துக்களை தான் மேற்கோள் காட்டி மகா விஷ்ணு பேசினார்.

துபாய், சிங்கப்பூர் பகுதிகளில் அவருக்கு தொடர்ந்து வகுப்புகள் இருக்கிறது. இருப்பினும் இந்திய இறையாண்மை சட்டத்தை மதிக்கும் வகையில் அவர் இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியாவிற்கு வந்தால் கைது செய்யப்படுவோம் என்று அவருக்கு தெரியும். காவல்துறையினர் அவரை எங்கு அழைத்து சென்றார்கள் என்றே தெரியவில்லை. மகா விஷ்ணுவுக்கு ஏதாவது ஆனால் யார் பொறுப்பு? ” என்று கேள்வி எழுப்பினார்.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பனையேறும் பால்பாண்டி செய்த பனை ஓலை விநாயகர்!

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *