மாற்றுத்திறனாளிகள் குறித்து பிற்போக்குத்தனமாகக் கருத்து தெரிவித்த வழக்கில் கைதான மகாவிஷ்ணுவுக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று(அக்டோபர் 3) ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த மாதம் நடைபெற்ற தன்னம்பிக்கை வகுப்பில் பங்கேற்றுப் பேசிய மகாவிஷ்ணு, மாற்றுதிறனாளிகள் குறித்து பிற்போக்குத்தனமாக மாணவிகள் மத்தியில் பேசினார்.
இது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றம் 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கிய நிலையில், விஷ்ணுவை திருப்பூரில் உள்ள அவரது பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனையடுத்து செப்டம்பர் 20 முதல் இன்று வரை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் அவரது ஜாமீன் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று விசாரித்தது.
விசாரணையில் “நான் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இழிவாகப் பேசவில்லை. அப்படி அவர்களின் மனம் புண்பட்டிருந்தால். நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும் என்னுடைய பேச்சைச் சிலர் எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டதனால் தான், பெரும் சர்ச்சை உருவானது” என்றிருக்கிறார்.
இதனை ஏற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடாது” : ஜோ பைடன்
கம்போடியாவில் மோசடி வேலை… அதிரடியாக 67 இந்தியர்கள் மீட்பு!
சமந்தா விவாகரத்து குறித்து பேச்சு: மன்னிப்பு கேட்ட தெலங்கானா அமைச்சர்!