திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது!

தமிழகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 உயர மலை மீது அரோகரா கோஷத்துடன் மகா தீபம் தற்போது ஏற்றப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று (நவம்பர் 26) அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

பின்னர் பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.

மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு தீபம் கொண்டு செல்லப்பட்டபோது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா ” என்று விண்ணை பிளக்கும் அளவிற்கு பக்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து பிற்பகலில் 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் துவங்கின.

ஏற்கெனவே மலை உச்சிக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 175 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 1100 மீட்டர் காடா துணி மற்றும் 4500 லிட்டர் நெய் கொண்டு சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது மலை மற்றும் கோவில் வளாகத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர ’அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் எழுப்பியது மயிர்க்கூச்செறிய செய்தது.

அதனைத் தொடர்ந்து கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும்.

இதேபோன்று மதுரை திருப்பரங்குன்றம், திருச்சி மலைக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் மகா தீபம் தற்போது ஏற்றபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

17வது ஆண்டிலும் கேப்டன் தோனி! – சிஎஸ்கே வெளியிட்ட வீரர்களின் முழுப்பட்டியல்!

”வெளிநாட்டில் திருமணம் நடத்தாதீங்க”: மன் கி பாத்தில் பிரதமர் வேண்டுகோள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0