போக்கு காட்டிய மக்னா யானை: ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்!

தமிழகம்

கோவை மாவட்டம் பேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி இன்று (பிப்ரவரி 23) பிடித்தனர்.

கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் புகுந்த மக்னா யானை குனியமுத்தூர், செந்தமிழ் நகர், அறிவொளி நகர், பி.கே.புதூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரிந்தது.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை வைத்தனர்.

மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் இரண்டு மருத்துவ குழுவினர் ஈடுபட்டனர். மேலும், ட்ரோன் கேமரா மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.

கோவை பேரூர் பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் மக்னா யானை இன்று வலம் வந்தது.

வனத்துறையினர் யானையை ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து இரண்டு ஊசிகள் யானைக்கு செலுத்தப்பட்டு தோல்வியடைந்தது. மூன்றாவது ஊசி சரியாக செலுத்தப்பட்டது. இதனால் யானைக்கு மயக்க நிலை ஏற்பட்டது.

பின்னர் மக்னா யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர், சின்ன தம்பி கும்கி யானையை அனுப்பினர். மக்னா யானையை பிடித்த வனத்துறையினர், தெங்குமரஹடா வனப்பகுதியில் விட உள்ளனர்.

செல்வம்

எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

பிஎஸ்என்எல் டூ ஜியோ: 38 ஆயிரம் இணைப்புகளை மாற்றிய கர்நாடகா காவல்துறை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *