தீபாவளி பலகாரங்கள் செய்ய தயாராகி விட்டீர்களா… அதில் ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா… இதோ… உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸாக இந்த மகிழம்பூ முறுக்கு அமையும்.
என்ன தேவை?
பச்சரிசி மாவு – 2 கப்
பயத்தம் மாவு – அரை கப்
பொடித்த சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
நெய் (அ) வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் – கால் கப்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பயத்தம் மாவு செய்ய ஒரு கப் பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்தெடுத்து, மிக்ஸியில் அரைத்து சலித்து அரை கப் அளவுக்கு மாவை எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பயத்தம் மாவு, பொடித்த சர்க்கரை, உப்பு, நெய் (அ) வெண்ணெய் என அனைத்தையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பின்னர் தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலக்கவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துக் காயவைக்கவும். மாவை மகிழம்பூ அச்சில் சேர்த்து, வாழையிலையில் சிறு சிறு வட்டங்களாகப் பிழிந்துவிடவும். அந்த முறுக்கை எண்ணெயில் சேர்த்து இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: உங்கள் வீட்டில் ‘ஹேப்பி குக்கிங்’ அமைய இதை ஃபாலோ பண்ணுங்க!
கிச்சன் கீர்த்தனா: மலாய் சம்சம்!
மாநாடா படம் ரிவ்யூவா? – அப்டேட் குமாரு