கிச்சன் கீர்த்தனா : மேகி பக்கோடா!

Published On:

| By Kavi

Maggi Pakoda Recipe in Tamil

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மேகியில் அனைவருக்கும் பிடித்த பக்கோடாவும் செய்து அசத்த இந்த மேகி பக்கோடா ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

மேகி – 140 கிராம்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்
மேகி மசாலா – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
சீஸ் – ஒரு கியூப்
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
கேரட் – ஒன்று
ஓரிகேனோ – கால் டீஸ்பூன்
மைதா மாவு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

70 கிராம் மேகியை 200 மில்லி கொதிக்கும் தண்ணீரில் போட்டு அது வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். சீஸ், கேரட்டைத் துருவிக்கொள்ளவும். மைதா மாவைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும். மீதி மேகியைப் பொடித்துக்கொள்ளவும் வேகவைத்த மேகி ஆறியதும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கொத்தமல்லித்தழை, இஞ்சி – பூண்டு விழுது, ஒரிகேனோ, வெண்ணெய், சீஸ், சில்லி ஃப்ளேக்ஸ், மேகி மசாலா சேர்த்து நன்றாகப் பிசையவும். எண்ணெய் தடவிய ஒரு தட்டில் இதைப் பரப்பி 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு எடுத்து இதைச் சதுர துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதை மைதா கரைசலில் முக்கியெடுத்து, பொடித்துவைத்துள்ள மேகியில் புரட்டவும். சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

1000 ரூபா பெட்ரோல்…500 ரூபா வெடி: அப்டேட் குமாரு

நாத்திக கொள்கையை அரசியலமைப்பு பாதுகாக்கிறது: உதயநிதி வாதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel