உரிமை தொகை: பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம்!

தமிழகம்

மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் மாதம் 3, 4ஆம் தேதிகளில் வேலூரில் நடக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் முதற்கட்டமாக 418 ரேஷன் கடைகளுக்கு கடந்த 24ஆம் தேதி முதல் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் குடும்ப அட்டை எண்ணிக்கையின் அடிப்படையில் அந்தப் பகுதி மக்களுக்கு, விண்ணப்பம் பதிவு செய்யும் நாள், நேரம் மற்றும் முகாம் நடைபெறும் விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

டோக்கன்களில் தெரிவிக்கப்பட்ட நாளில் விண்ணப்பம் பதிவு செய்யாத விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 3, 4ஆம் தேதிகளில் அந்தந்த மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாமை விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்படி தகவலை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா: காலை உணவைத் தவிர்த்தால், உடல் எடை குறையுமா?

டிஜிட்டல் திண்ணை:‌ எம்.பி. தேர்தலுக்குள் துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி

+1
0
+1
0
+1
2
+1
7
+1
1
+1
6
+1
7

1 thought on “உரிமை தொகை: பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *