குடும்ப தலைவிகள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான மாதிரி விண்ணப்பத்தை தமிழக அரசு இன்று (ஜூலை 8) வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.
இந்நிலையில் கலைஞர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளைத் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டிருந்தது. தொடர்ந்து இன்று உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்வதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அந்த படிவத்தில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்பவர்களின் பெயர், ஆதார் எண், குடும்ப அட்டை எண், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், வங்கி கணக்கு விபரங்கள், குடும்ப உறுப்பினரின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி சொந்த வீடா, வாடாகை வீடா, வீட்டில் 4 சக்கர வாகனங்கள் இருக்கின்றதா, நன்செய் அல்லது புன்செய் நிலம் குறித்த தகவல்கள் என மொத்தம் 13 விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
யாருக்கு உரிமைத் தொகை உண்டு / இல்லை என்று தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டிருந்த விபரங்களை உறுதி மொழியாக விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் படித்துப் பார்த்து விண்ணப்பதாரர் கையொப்பம் இட வேண்டும். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுதியுடையவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.
மோனிஷா
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் கலவரம்: 14 பேர் உயிரிழப்பு!
Comments are closed.