மகளிர் உரிமை தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதோர் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 30 நாட்களுக்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மேல்முறையீடு செய்யும் காலகட்டத்தில் இதுவரை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பயனாளிகள் இலக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. தகுதி வாய்ந்த ஒரு மகளிர் கூட விடுபட்டுவிட கூடாது என்பது முதல்வர் ஸ்டாலின் உத்தரவாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு சூழ்நிலைகளால் விண்ணப்பிக்க தவறியவர்கள் மேல்முறையீடு செய்ய வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திலேயே புதிதாக விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“சுப்மன் கில் அடுத்த விராட் கோலியாக வர விரும்புகிறார்” – ரெய்னா
குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்!