மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு இன்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இன்று வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது,
மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும்.
நான்கு சக்கர வாகனம், கனரக வாகனப்பதிவு, பத்திரப்பதிவு குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பயனாளிகளின் பொதுவிநியோக திட்டம், சேவை வரி தரவுகள் ஆய்வு செய்யப்படும்.
ஆண்டுதோறும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் தொழில், மின்சார பயன்பாடுகள் மற்றும் இறப்பு விவரங்கள் பதிவு செய்யப்படும்.
இந்த நெறிமுறைகளை பின்பற்றியே பயனாளிகள் பட்டியல் புதுப்பித்தல், நிராகரித்தல் என தகுதி உறுதிபடுத்தப்படும்.
இதற்கிடையே இதில் ஏதேனும் பிர்ச்சனை ஏற்பட்டால் பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம்” என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குங்குமப் பூவை சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது எவ்வளவு உண்மை?
வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!