மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு : விரைவில் குறுஞ்செய்தி!
மகளிர் உரிமைத் தொகை பெற 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர் என்றும் இதில் தகுதியானவர்களுக்கு நவம்பர் 25ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை மகளிருக்கு வழங்கப்படும் என்று திமுக தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக 1.06 கோடி பெண்களுக்கு மாதம் மாதம் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் தகுதியுள்ள பல பெண்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தகுதியானவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற மேல்முறையீடு செய்யலாம் எனத் தமிழக அரசு அறிவித்தது.
இதற்குக் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்படும். அதற்கான கள ஆய்வுகள் நடந்து வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கள ஆய்வுப் பணிகள் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைந்து, இதில் எவ்வளவு பேர் தகுதியானவர்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு 25ஆம் தேதியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ODI World Cup 2023: அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா? மற்ற அணிகளுக்கான வாய்ப்பு என்ன?
இசை நிறுவனத்தை தொடங்கும் வைஜெயந்தி மூவிஸ்!