மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஆறு பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ -ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்டு வந்த பாரத் கெளரவ் ஆன்மீக சுற்றுலா ரயில் இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை மதுரை ரயில் நிலையம் வந்தடைந்துள்ளது. இந்த ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகளில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்திற்குள்ளானது.
இந்த தீ விபத்தில் ஒரு மூதாட்டி, 5 ஆண்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து மதுரை ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பயணிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கார்ன் சாலட்
டிஜிட்டல் திண்ணை: சசிகலா-எடப்பாடி சமாதானமா… அதிமுகவில் என்ன நடக்கிறது?