மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு முதல் பரிசாக நிஸான் கார் வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 16) காலை 7 மணிக்கு துவங்கியது. 10 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது. இந்த போட்டியில், 1000 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.
போட்டியின் முடிவில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக நிஸான் காரை, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். கடந்த 2020, 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பிரபாகரன் முதலிடம் பிடித்திருந்தார்.
11 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த தமிழரசனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த காளைக்கான பரிசு புதுக்கோட்டை ராக்கெட் சின்னக்கருப்பு காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், 3 காவலர்கள், 14 மாடுபிடி வீரர்கள், 9 காளை உரிமையாளர்கள், 16 பார்வையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவருக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹனுமான் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போட் இதோ!
அடுத்த ஏழு நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம்!