வட இந்தியர்கள் தமிழர்களை தாக்கியதற்கு, நகைச்சுவை நடிகர் மதுரை முத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் குடியேறுவது அதிகரித்து கொண்டே இருக்கிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களில் வட மாநிலத்தவர்கள் பணிபுரிந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் சிலர் டீக்கடையில் ஏற்பட்ட பிரச்சனைக்காகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கட்டையை வைத்து துரத்தி அடிக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து பல்வேறு தரப்பினரும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் மதுரை முத்து வடமாநிலத்தவர்கள் தமிழர்களை தாக்கியது குறித்து வீடியோ ஒன்றை அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு வீடியோ பார்த்தேன். திருப்பூரில் வடமாநில இளைஞர்கள் 100 பேர் பெல்ட், கத்தி, மரக்கட்டையை வைத்துக் கொண்டு தமிழ் இளைஞர்களை விரட்டி அடிக்கும் காட்சியை பார்த்தோம்.
லேசா வேலை கேட்டு வந்தா, 10 சதவீதம் அறிவித்தோம். திருப்பூரில் இப்போ 65 சதவீதம் பேர் வட இந்தியர்கள் தான். எல்லாரும் வேலையை இழந்துவிட்டு ஊருக்கு வந்துட்டீங்க. குடிபுகுந்து வந்தவர்கள் விரட்டி அடிக்கும் அளவிற்குத் தமிழ் இளைஞர்கள் விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்.
பாலாபிஷேகம் பண்ற வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவன் இன்னும் கொஞ்ச நாள்ல பால் ஊத்திட்டு போக போறான். இப்படி போச்சினா வேலை வெட்டியே இல்லாம பிச்சை எடுக்கற காலகட்டத்திற்கு தமிழ் இளைஞர்கள் வர போகிறீர்கள் என்பது உறுதி.
செட்டியார் தெரு, தேவர் தெரு, நாடார் தெரு, கவுண்டர் தெரு என்பது போல இனிமேல் வடக்கன் தெரு என்று வரப்போகிறது. ரேஷன் கார்டு கூட வாங்கிட்டாங்க. இதை சாதாரண வீடியோவாக நினைக்காதீங்க. ரொம்ப கவனமா இருக்கணும்.
நானும் நிறைய ஊர்களுக்குச் சென்று ஹோட்டல்களில் தங்குகிறேன். அதிகபட்சம் வட இந்திய இளைஞர்களாக இருக்கிறார்கள். நம்ம தமிழர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை. ஏனென்றால் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள்.
விரட்டி அடிக்கும் காட்சியைப் பார்த்தவுடன் எனக்கு அவ்வளவு சங்கடமாக இருந்தது. வட இந்தியாவில் இந்தி தெரியாமல் ஒரு இடத்தில் 2 நாட்கள் தங்க முடியவில்லை. ஆனால் அவர்கள் விரட்டி அடிக்கும் அளவிற்கு நாம் அசால்டாக இருக்கிறோம்.
தமிழக இளைஞர்கள் இந்த வீடியோவை பார்த்து விட்டு விழிப்புணர்வோடும் கவனமுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாகத் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார், “கடந்த ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாகப் புகார்கள் எதுவும் வரவில்லை. இருப்பினும் இது தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகின்றது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாகத் தவறான தகவல் பரவி வருவதால், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேட்டியளித்திருந்தார்.
காவல்துறை தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தாலும் மதுரை முத்து போன்ற சிலர் தங்களது கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
மோனிஷா
டாஸ்மாக் விருது சர்ச்சை : அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!
தில் ராஜு பாணியில் கல்யாண பேனர்: இணையத்தில் வைரல்!