மதுரை எலியார்பத்தி கிராமத்தில் இன்று (ஜனவரி 16) நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், காளை குத்தியதில் பார்வையாளர் ரமேஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் எலியார்பத்தி கிராமத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு இன்று மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை ஊர்ப்பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
அப்போது மஞ்சு விரட்டு போட்டியை பார்க்க சென்ற ரமேஷை சீறிவந்த காளை ஒன்று குத்தியது. இதனால் அவரது இடதுபக்க மார்பில் பலத்த காயமடைந்தது.
உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரமேஷின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மஞ்சு விரட்டு போட்டியை பார்க்க சென்ற ரமேஷ், உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…