மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை இன்று ( செப்டம்பர் 4 ) 1 கிலோ ரூபாய் 2,300 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ,கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களது வீடுகள் முன்பு பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் போட்டு வருகின்றனர்.
இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு மதுரையில் இருந்து பூக்கள் சப்ளை செய்யப்படுகிறது.

இதனால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று( செப்டம்பர் 4 ) மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 1 கிலோ மல்லிகை பூ ரூபாய். 2300-க்கும், முல்லைப்பூ ரூபாய். 800-க்கும், பிச்சிப்பூ ரூபாய். 700-க்கும், சம்பங்கி பூ ரூபாய்.150-க்கும், பட்டன் ரோஸ் பாக்கெட் ரூபாய். 200-க்கும், செண்டுமல்லி ரூபாய். 80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகூறித்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராமசந்திரன் கூறியதாவது , ’கடந்த 1 வாரமாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாளையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது’ என்று தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்