மதுரை சக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (மார்ச் 11) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் முப்புலி சாமி கோவில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.30 மணிக்கு துவங்கியது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1001 காளைகள் மற்றும் 480 மாடு பிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர். இந்த போட்டியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்துள்ளனர்.
வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், மேசை, சைக்கிள், பாத்திரங்கள், தங்க நாணயங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
செல்வம்