மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பது வழக்கம்.
ஜனவரி 15 ல் அவனியாபுரத்திலும், 16 ல் பாலமேட்டிலும், 17 ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடங்கியது.
காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதோடு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியமாகும்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஜல்லிக்கட்டில் எதாவது ஒன்றில் மட்டுமே பங்கேற்க முடியும்.
ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதோடு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியம் செய்திருக்க வேண்டும்.
இன்று(ஜனவரி 10) நண்பகல் 12 மணி முதல் 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை இணைய தளத்தின் வாயிலாக முன் பதிவு செய்திட வேண்டும்.
காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் madurai.nic.in எனும் இணையதளம் வாயிலாக முன் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
தமிழகம் கொடுப்பது கனிமம், கேரளா கொடுப்பது கழிவா? – நீதிபதிகள் அதிருப்தி!