மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.48 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான கட்டடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 21) காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில், 288 முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கும் வகையில் தரை மற்றும் மூன்று தளங்களுடன், ரூ.12.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 144 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதிக் கட்டடம்,
174 இளநிலை மருத்துவ மாணவர்கள் தங்கும் வகையில் தரை மற்றும் மூன்று தளங்களுடன், ரூ.8.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 174 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதிக் கட்டடம்,
204 மருத்துவ மாணவியர்கள் தங்கும் வகையில், ரூ.9.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 68 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதி கட்டடமும்,
132 மருத்துவ மாணவியர்கள் தங்கும் வகையில் ரூ.9.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 44 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதி கட்டடங்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று,
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நூல்களைப் படித்து பயன்பெறும் வகையில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 8.62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடத்தையும் முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
ஜெ.பிரகாஷ்
அரசியலிலிருந்து மருது அழகுராஜ் விலகல்!
ஸ்டெர்லைட் நிறுவனம் மீது கேள்விகளை அடுக்கும் திருமுருகன் காந்தி