மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 24 மணி நேர சேவையை துவங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 7 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகியவை சர்வதேச விமான நிலையங்களாகவும்,
சேலம், தூத்துக்குடி, வேலூர் ஆகியவை உள்நாட்டு விமான நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் மதுரை விமான நிலையம் தற்போது இலங்கை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் லண்டன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் மதுரையில் இருந்து விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரவு நேர உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை மதுரை உள்பட 5 விமான நிலையங்களில் தொடங்குவதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி மதுரை, அகர்தலா, இம்பால், போபால், சூரத் ஆகிய 5 விமான நிலையங்களில் வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 24 மணி நேர விமான சேவையை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
உயிர்விடும் அளவிற்கு சினிமா ஒன்றும் முக்கியமல்ல” – லோகேஷ் கனகராஜ்
ஆளுநர் பொங்கல் விழா : திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு