மதுரை எய்ம்ஸ்: புதிய தலைவர் நியமனம்!

Published On:

| By Selvam

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தலைவராக உத்தரப்பிரதேச மாநிலம் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர்.பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று பாஜக அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவித்தது. இதனை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணிக்காக 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் கட்டுமான பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.

இந்தநிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு ரூ.1977.8 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தலைவராக இருந்த நாகராஜன் வெங்கட்ராமன் கடந்த மாதம் மாரடைப்பால் காலமானார்.

இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பணியிடம் காலியாக இருந்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு மருத்துவர் பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியின் தலைவராக உள்ளார்.

செல்வம்

இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவடைந்தது!

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? – தேதியை அறிவித்த சபாநாயகர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share