சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று (செப்டம்பர் 1) இரவு வெளியானது.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. தற்போது செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.
தேர்வு முடிவுகளை மாணவர்கள், results.unom.ac.in, exam.unom.ac.in, egovernance.unom.ac.in ஆகிய இணையத்தள முகவரி வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இறுதி செமஸ்டரில் அரியர் வைக்கும் மாணவர்களுக்கு உடனடியாக எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், 6-வது செமஸ்டரில் அரியர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை மாணவர்கள் நான்காவது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கும் உடனடியாக எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு நடைபெறும்.
அரியர் வைக்கும் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி வாயிலாக செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் இளநிலை மாணவர்கள் உடனடி தேர்வுக்கான கட்டணமாக 300 ரூபாயும், முதுகலை மாணவர்கள் 350 ரூபாயும் எம்.பி.ஏ., எம்.எல். சட்டப்படிப்பு மாணவர்கள் 600 ரூபாயும் செலுத்த வேண்டும்.
சிறப்புத் தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
சென்னை பல்கலையில் சாதிப் பாகுபாடு: துணைவேந்தர் மீது முதல்வரிடம் புகார்!