தமிழகத்தில் நாளை (நவம்பர் 19) டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளதால் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகச் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளது. அதேசமயம் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வு காரணமாகச் சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகச் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாள் என்பதால் தேர்வு எப்படி நடக்கும் என்ற குழப்பம் தேர்வர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
மோனிஷா
பிரியா மரணம்: மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு!
லவ் யூ தங்கமே: நயனுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்