சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று (அக்டோபர் 1) பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைப்பெற்றது.
இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக என்.எஸ்.ரேவதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணை தலைவராக ராஜலட்சுமி, செயலாளராக பர்வீன், நூலகராக மார்க்கெரெட் லாரன்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் சான்றிதழ்களை வழங்கினார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை டூ குமரி வரை : நிதின் கட்கரியிடம் கோரிக்கைகள் வைத்த எ.வ.வேலு
30 ஆயிரம் இருக்கைகள், புத்தர் முதல் அண்ணா வரை… விசிக மாநாட்டு பணிகள் மும்முரம்!