எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை… உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

Published On:

| By Selvam

சமூக வலைதளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 2) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், “எந்த பதிவுகள் வந்தாலும் அதை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுவீர்களா? பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், எஸ்.வி்.சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தனது தீர்ப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

செல்வம்

வைரல் ஆடியோ… பாஜகவில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை – குஷ்பு விளக்கம்!

அமித் ஷாவுக்கே தண்ணி காட்டிய அண்ணாமலை… சாட்டையடிப் போராட்டம் இதற்காகத்தான்! ஆங்கிலப் பத்திரிகையாளரின் அதிர்ச்சித் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share