விதி மீறி கட்டிடம் – இரக்கமே கூடாது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

Madras High Court orders

சென்னை தி.நகரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Madras High Court orders

சென்னையின் வணிக பகுதியான தி.நகரில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய கட்டடத்துக்கு அனுமதி பெற்று விட்டு விதி மீறி 10 மாடிகள் வரை கட்டிய ஜான் பிரியா பில்டர்ஸ் நிறுவனம், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை வரன்செய்ய கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் விண்ணப்பித்தது.

இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தொடர்ந்து கட்டிடத்தை இடிப்பதற்காக நோட்டீஸும் அனுப்பியது.

இதை எதிர்த்து அந்த கட்டுமான நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 18) நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விதிமீறி கட்டப்பட்ட கட்டிடத்தை வரன் செய்ய மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அந்தக் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

8 வாரங்களில் இந்த கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

மேலும், “வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது.
ஒருபுறம் கட்டிட திட்ட அனுமதியை வலியுறுத்தும் அதிகாரிகள், மறுபுறம் அவற்றை வரன்முறை செய்யக் கோரும் விண்ணப்பங்களை ஏற்பதால் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டபூர்வமாக்கப்படுகிறது. இதை அனுமதிக்க கூடாது.

பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக இதுபோன்று விதியை மீறுபவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர். Madras High Court orders

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share