தமிழக பூர்வீகம்: 100 நாட்களை கடந்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா

Published On:

| By Selvam

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கடந்த 25 ஆண்டுகளில் 100 நாட்களுக்கு மேல் பதவி வகித்த முதல் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இந்த ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதியுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

உயர் நீதிமன்ற அதிகாரிகளின் கூற்றுப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுவரை 7 தலைமை நீதிபதிகள் மற்றும் 28 பொறுப்பு தலைமை நீதிபதிகள் பணியாற்றியுள்ளனர்.

தலைமை நீதிபதி இல்லாத சமயத்திலும், நீதிபதிகள் நியமனம் தாமதம் ஆனாலோ உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, தலைமை நீதிபதியை நியமிக்கும் வரை இந்த பதவிகளை வகிக்கிறார்.

நீதிபதி எஸ். மோகன் தமிழகத்தைச் சேர்ந்த கடைசி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 19 முதல் 24 ஆம் தேதி வரை 6 நாட்கள் மட்டுமே இந்தப் பதவியில் இருந்தார்.

அதன்பிறகு, பிற மாநிலங்களைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டனர்.

madras hc acj traja

இதேபோல், நீதிபதி கே.ஏ.தணிக்காசலம் 1997 ஆம் ஆண்டு மார்ச் 20 முதல் ஜூலை 6 வரை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

அவருக்குப் பிறகு, 14 நீதிபதிகள் பொறுப்பு தலைமை நீதிபதிகளாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் 11 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

கடந்த 25 ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக என். தினகரன், எம்.துரைசாமி, டி.ராஜா ஆகிய மூன்று நீதிபதிகள் மட்டுமே பணியாற்றியுள்ளனர்.

நீதிபதி என்.தினகரன் 2004 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி முதல் 27 வரையிலும், 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் நவம்பர் 11 வரையிலும் இரண்டு முறை குறுகிய கால பதவிகளை வகித்துள்ளார்.

நீதிபதி துரைசாமி 2021 ஆம் ஆண்டு நவம்பர் 17 முதல் 21 வரையிலும், மீண்டும் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 முதல் 21 வரையிலும் இரண்டு முறை பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

அவருக்குப் பிறகு மதுரை மாவட்டம் தேனூரைச் சேர்ந்தவரும் தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதியுமான டி.ராஜா பதவியேற்று இன்று வரை தொடர்கிறார்.

செல்வம்

கார் விற்பனை:  ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!

”வட மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்” – ராகுல்காந்தி

பொங்கல் பரிசு: இன்று முதல் விநியோகம்! டோக்கன் இல்லாதவர்களுக்கு எப்போது ?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel