Madhavaram to Siruseri Chennai Metro

சென்னை மெட்ரோ வழித்தடம் 3: ரயில் நிலையங்கள் எங்கெங்கே?

தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1204.87 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1204.87 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் JICA நிதியுதவியின் ஒரு பகுதியாகும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் கெல்லிஸ் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும், அயனாவரம், புரசைவாக்கம் ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் தி.அர்ஜூனன் (திட்டங்கள்) மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), இணை பொது மேலாளர் ரீபு டாமன் துபே (சுரங்கப்பாதை),

மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வழித்தடம் 3 – மாதவரம் முதல் சிறுசேரி வரை 45.8 கி.மீட்டருக்கு அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 26 கி.மீட்டர் தூரம் நிலத்துக்கு அடியில் மெட்ரோ ரயில் செல்லும்.

சோழிங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலாம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் நிலத்துக்கு மேல் செல்லும்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: காரப்புட்டு

டிஜிட்டல் திண்ணை:  ’அப்பவே சொன்னேன்…’ பொன்முடி விவகாரத்தில் ஸ்டாலின் டென்ஷன்!  செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதம்! 

+1
0
+1
0
+1
1
+1
2
+1
1
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *