Macaroni Pasta Soup Recipe in Tamil Kitchen Keerthana

கிச்சன் கீர்த்தனா: மக்ரோனி சூப்

தமிழகம்

இன்றைய குழந்தைகளின் விருப்ப உணவுகளில் ஒன்று நூடுல்ஸ் வகையைச் சேர்ந்த மக்ரோனி. இந்த மக்ரோனி சூப் பசியைத் தூண்டும். உடலுக்குத் தேவையான சக்தியை தரும். செரிமானமும் நன்றாக இருக்கும். நாள் முழுக்கப் புத்துணர்ச்சி தரும்.

என்ன தேவை?

மக்ரோனி – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – ஒன்று
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மக்ரோனியைப் போட்டு வேகவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, ஒரு மக்ரோனியை எடுத்துக் கிள்ளிப்பார்த்தால், மென்மையாக இருக்க வேண்டும். இதுதான் பக்குவம். இந்தப் பக்குவத்தில் இறக்கி, தண்ணீரை வடித்துவிட்டு, சாதாரண தண்ணீரை விட்டு நன்கு அலசி எடுத்துக்கொள்ளவும், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பெரிய துண்டுகளாக, நான்காக வெட்டிக்கொள்ளவும். குக்கரில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கைப் போட்டு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு சேர்த்து மூடிவைத்து, மூன்று, நான்கு விசில் வரும் வரை வைத்து எடுக்கவும். ஆறியதும், அந்தத் தண்ணீரிலேயே அரைத்து, வடிகட்டவும். அதில் அரை டீஸ்பூன் மிளகுத்தூளைச் சேர்க்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வெண்ணெயைவிட்டு, அது உருகியதும் சூப்பில் ஊற்ற வேண்டும். பிறகு, வேகவைத்த மக்ரோனியைச் சேர்த்து, கொத்தமல்லியைத் தூவிக் கலந்து, கப்பில் எடுத்துப் பருகலாம். நல்ல ஃபில்லிங்காக இருக்கும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் பாதாம் அல்லது வேர்க்கடலையை உடைத்து வறுத்துச் சேர்க்கலாம். சுவை கூடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: கிரீன் டீ பிரியரா நீங்கள்? அளவுக்கு அதிகமாகக் குடிப்பது ஆபத்து!

கிச்சன் கீர்த்தனா: பாம்பே கார டோஸ்ட்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *