அரிசி கழுவிய நீரில் நிறைய சத்துகள் உள்ளன. அதை வீணாக்காமல் இந்த சீசனுக்கு ஏற்ற மாங்கொட்டை வற்றலைச் சேர்த்து சுலபமாகச் செய்யும் செட்டிநாடு ஸ்பெஷல் உணவான இந்த மாங்கொட்டை வற்றல் களனி வைத்து வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.
என்ன தேவை?
அரிசி கழுவிய நீர் – ஒரு கப்
மாங்கொட்டை வற்றல் – 4
சின்ன வெங்காயம் – 5 (நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (நறுக்கவும்)
எண்ணெய் – தாளிக்க
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மாங்கொட்டை வற்றலை அரை மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்துக் கழுவி எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு மாங்கொட்டை வற்றலையும் அதில் சேர்த்து வதக்கவும். கடைசியாக உப்பு மற்றும் அரிசி கழுவிய நீரையும் சேர்த்து, கலவையைக் கொதிக்கவிடவும். வற்றல் நன்கு வெந்ததும் இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மாவற்றல் சாம்பார்
சண்டே ஸ்பெஷல்: மாம்பழம்…. யார்… யார், எந்த அளவு, எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது?
தோனி பாணியில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கேதர் ஜாதவ்
உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா? அப்டேட் குமாரு