சிசேரியன் பிரசவங்களைத் தவிர்க்க கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம்

அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலே அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதால் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று 35ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அனைத்து தரப்பு பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்த வேண்டும் என்ற நோக்கில்  மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், “நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் பல சுணக்கங்கள் இருந்த போதிலும், மக்களிடையே தாக்கங்கள் இருந்த போதிலும் அரசு எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 96.26 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 90.15 சதவிகிதம் பேர் இரண்டாம் தவணை  தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் பெரிய ஆர்வம் காண்பிக்கவில்லை. கொரோனா பாதிப்பு அதிகமாக இல்லாததும் இதற்கு ஒரு காரணம்.
தமிழகத்தில் 15 சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். சுமார் 26 லட்சம் பேர் முதல் தவணையும், 86 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். உலகளவில் இன்றும் கொரோனா அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக உள்ளது. எனவே தமிழகம் தன்னை தற்காத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே தீர்வு. பொதுமக்கள் தயங்காமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். 18 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 30 வரை இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்” என்று பேசியவர்,
மேலும், “அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலே அதிக சிசேரியன் பிரசவங்கள்  நடைபெறுவதால் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். சிசேரியன் பிரசவங்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மழைக்காலத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகரிப்பது வழக்கம். எனவே மாவட்ட அளவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு பரவல் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மருந்துகள் கைவசம்  தயாராக உள்ளது. கடந்த காலங்களை விட டெங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *