தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று (மார்ச் 21) காலை 11 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தியாவில் கடந்த 14 நாட்களில் மட்டும் கொரோனா தொற்று 281 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 918 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6,350 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது, காய்ச்சல் சிறப்பு முகாம்கள், மக்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
செல்வம்
வெளிமாநில உருளைக்கிழங்கு: நீலகிரி விவசாயிகள் கவலை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!