தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிரபல திரைப்படப் பாடலாசிரியர் கபிலன் தன் மகளுக்கு தூரிகை என்று கவித்துவமான பெயரை இட்டார். தூரிகை இன்று (செப்டம்பர் 9) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவரது உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர், கடந்த 2020ம் ஆண்டு பீயிங்வுமன் (BeingWomen) என்கிற இணைய இதழைத் தொடங்கி, தொடர்ந்து அதில் பெண்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தகவல் கிடைத்ததும் பலரும் தங்களது அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டு வருகின்றனர்.
நீட்- தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்: தலைவர்கள் வேண்டுகோள்!