இன்று முதல் அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (டிசம்பர் 15) முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை (டிசம்பர் 16) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மற்றும் டிசம்பர் 17 ஆம் தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாகக் குறையக்கூடும்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இந்திய பெருங்கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி,
மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும்.
பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 17 ஆம் தேதி வரை தெற்கு வங்கக்கடலில் மையம் கொள்ளும்.
தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியை இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது.
மோனிஷா