வடக்கு அந்தமான் அருகே வரும் அக்டோபர் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் நேற்று(அக்டோபர் 17) இரவு முதல் இன்று அதிகாலை வரை வேளச்சேரி, மடிப்பாக்கம், திருவான்மியூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது.
இந்நிலையில் தமிழ்நாடு ‘வெதர்மேன்’ ப்ரதீப் ஜான் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “கே.டி.சி.சி(காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு), வேலூர், ராணிப்பேட்டை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று(அக்டோபர் 17) மழை பெய்துள்ளது.
இன்று(அக்டோபர் 18) இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மீண்டும் வடதமிழகத்தின் உட்பகுதிகள் உட்பட வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். KTCC(காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம்.
மேலும், வடக்கு அந்தமான அருகே வங்கக்கடலில் உருவாக இருக்கும் அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னையின் அட்சரேகைக்கு(Latititude) மேலே இருக்கும். அது வலுப்பெறாமல் இருந்தால், கீழைக்காற்றுகளால்(Easterlies) சென்னையை நோக்கி தள்ளப்படலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அது வடக்கே நகர்ந்து விடும்.
ஆனால் வருகிற நவம்பர் மாதம் ‘மேடன்-ஜூலியன் ஆஸிலேஷன்’ என்கிற நிகழ்வால் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஓவியாவின் அந்த வீடியோவை வெளியிட்டது யார் தெரியுமா? பிடிபடும் சுள்ளான்!
58,000 நெருங்கிய தங்கம் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஹெல்த் டிப்ஸ்: குதிகால் வலிக்குத் தீர்வு தரும் ‘ஷாக் வேவ்’ சிகிச்சை!