வடக்கு அந்தமான் கடல் மற்றும் மத்திய-கிழக்கு வங்கக்கடல் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(அக்டோபர் 21) தெரிவித்துள்ளது.
மத்திய – கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடலோரம், அக்டோபர் 21ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. அது படிப்படியாக வலுவடைந்து, வருகிற 23-ஆம் தேதி மத்திய- கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ‘டானா’ புயலாக உருமாற வாய்ப்புள்ளது என்று நேற்று(அக்டோபர் 20) இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ” வடக்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று நிலவிய மேலடுக்கு காற்று சுழற்சியின் தாக்கத்தினால், இன்று(அக்டோபர் 21) அதிகாலை 5.30 மணி அளவில் மத்திய-கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் வடக்கு அந்தமான் கடலை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதனால் அந்தமான் நிகோபர் தீவில் மிக கனமழை இன்று பெய்யும். மேலும் இது அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும், அதற்குப் பின்னர் புயலாக மாறி அக்டோபர் 24 அதிகாலை மேற்கு வங்காளம்-ஒடிசா அருகே கரையக் கடக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஏறிக்கொண்டே போகும் தங்கம் விலை… இன்றையே ரேட் எவ்ளோ?
மீண்டும் மீண்டுமா? : நியூசிலாந்திடம் பட்டத்தை பறிகொடுத்த தென்னாப்பிரிக்கா!