குறைந்த தங்கம், வெள்ளி விலை!

Published On:

| By indhu

Low Gold and Silver Prices - Today's Situation!

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 13) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூன் 12) தங்கம் விலை கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.6,680க்கும், ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.53,440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,280க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660க்கும், சவரன் ரூ.160 குறைந்து ரூ.53, 280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,130க்கும், சவரன் ரூ.160 குறைந்து ரூ.57,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.95.80க்கும், ஒரு கிலோ ரூ.95,800க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.600 குறைந்துள்ளது.

அதன்படி, வெள்ளி விலை இன்று (ஜூன் 13) கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.95.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.600 குறைந்து ரூ.95,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காஷ்மீரில் 4 நாட்களில் 4 தீவிரவாத தாக்குதல்… மோடி மவுனம் சாதிப்பது ஏன்? ராகுல் கேள்வி!

T20 உலகக்கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel