தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி வரை 12.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் மக்களவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், முதல்முறை வாக்காளர்கள் என பலரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலை 9 மணி வரை எவ்வளவு வாக்குகள் பதிவாகியிருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 9 மணி வரை 12.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 15.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
அடுத்ததாக தருமபுரி,சேலம்,நாமக்கல், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.
குறைந்த பட்சமாக வட சென்னையில் 9.73 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 13.48% வாக்குகள் பதிவாகியிருந்தன.
அதன்படி இந்த தேர்தலில் 9 மணி நிலவரத்தை பொறுத்தவரை 0.93 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சித்திரை திருவிழா: ஆட்சியர் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்!
ஈவிஎம் பழுது சரிசெய்யப்பட்டது : சத்ய பிரதா சாகு