“ED அதிகாரி லேப்டாப்பில் சிக்கிய பட்டியல்” : அங்கித் திவாரிக்கு ஜாமீன் கிடைக்குமா?

Published On:

| By Kavi

Will ed officer Ankit Tiwari get bail?

லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் லேப்டாப்பில் 75 பேரின் பெயர் பட்டியல் சிக்கியிருப்பதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்ற மதுரை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டார்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதனிடையே அங்கித் திவாரி ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (டிசம்பர் 19) நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரானார்.

“அங்கித் திவாரியிடம் விசாரணை செய்ததில், மேலும் சில அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததது. இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அங்கித் திவாரி லேப்டாப்பில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கியுள்ளது. 75 பேரின் பெயர் பட்டியல் கிடைத்துள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதாடினார் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்.

அங்கித் திவாரி தரப்பில், பொய்யான குற்றச்சாட்டில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அதிகாரி என்பதால் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அன்று விலை போகாத வீரர்… இன்று ரூ.14 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே! : யார் அவர்?

குற்றவாளி என தீர்ப்பு: காரில் இருந்து தேசியக் கொடியை கழற்றுகிறாரா அமைச்சர் பொன்முடி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel